கொரோனா சமூக தொற்றாக மாறியிருக்கிறது-ஐஎம்ஏ

கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டது-நிபுணர் தகவல்
ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் நேற்றே கூறியது போல், இந்தியாவில், கொரோனா சமூக தொற்றாக மாறியிருப்பதாக என டெல்லியின் பிரபல சர் கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக அறுவை சிகிச்சைப் பிரவு தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று முதலில் தாராவி, டெல்லியின் சில பகுதிகள் என குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் மட்டுமே பரவியது என கூறியுள்ள அவர், இப்போது நாட்டின் அனைத்து இடங்களிலும் வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவித்தார்.
இந்திய மருத்துவர் சங்கம் கூறியதை 100 சதவிகிதம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள அவர், வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது என்பதை பார்க்கும் அனைவருக்கும் இது புரியும் என கூறியுள்ளார்.
Comments