மின் கட்டணத்தில் சலுகை வழங்க தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

0 1249
மின்கட்டண உயர்வு சாதாரண மக்களுக்கு ஒரு சுமை - மு.க. ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மின்கட்டணத்தில், சலுகை வழங்குமாறு, தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின் கட்டணம் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மின் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, அதுபோல, தமிழ்நாடு அரசும், மின்கட்டண சலுகை அளிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மின் கட்டணத்தில் சலுகை வழங்கக்கோரி, வருகிற 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி ஏந்தி, கண்டன முழக்கம் எழுப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments