வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

0 2036
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

உள்தமிழகம், கடலோர தமிழகம் மற்றும், புதுச்சேரி, காரைக்காலிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

குமரி கடலை ஒட்டிய, அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments