சிகாகோவில் கொலம்பஸ் சிலையை கவிழ்க்க முயன்ற போராட்டக்காரர்கள்

0 1328

அமெரிக்காவின் சிகாகோ நகரில், கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையை கவிழ்க்க முயன்ற போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.

இனபாகுபாடுக்கு எதிராகவும் 1833 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட அமெரிக்கர்களின் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதை வலியுறுத்தியும் ஆரிகோ பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கிருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையை கயிறு கட்டி கவிழ்க்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் கலவரம் மூண்டது. பின்னர், தடுப்புகள் வைத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி பூங்காவை விட்டு போலீசார் வெளியேற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments