இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் உச்சி மாநாடு

0 594

15-வது உச்சி மாநாட்டின் மூலம் இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் புதிய உந்துதல்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையத்தலைவர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கொரோனா பரவலை தொடர்ந்து இருதரப்பும் சீன உடனான வர்த்தகத்தை குறைக்கும் நோக்கம் கொண்டுள்ள நிலையில், நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலநிலை, வர்த்தகம், முதலீடு தொடர்பாக மட்டுமின்றி டிஜிட்டல் பொருளாதாரம், ஸ்மார்ட் சிட்டி, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments