இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆக உயர்வு

0 2189

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, இன்று காலை 9 மணி நிலவரப்படி, 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆகவும் உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 609 ஆகவும் உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே, நேற்று வரை 1 கோடியே 18 லட்சத்திற்கும் பரிசோதனைகள் (1,18,06,256)செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments