இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி

0 4226

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஊரடங்கு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையுடன் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி இப்போட்டி தொடங்கியது. டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களை குவிக்க, அடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 313 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments