கர்நாடக மாநிலத்தில் மைசூர் அரண்மனை மீண்டும் மூடல்

0 1454

கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையை சேர்ந்த ஊழியரின் உறவினருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், அந்த அரண்மனை மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முதன்முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மார்ச் மாதம் 15 முதல் 22ம் தேதி வரை அரண்மனை மூடப்பட்டிருந்தது. பிறகு கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அரண்மனை திறக்கப்பட்டது.

இந்நிலையில் அரண்மனை ஊழியர் ஒருவரின் உறவினருக்கு பரிசோதனையில் கடந்த வியாழக்கிழமை கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து அரண்மனை தற்காலிகமாக மீண்டும் மூடப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments