நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 519 பேர் பலி

0 1585
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக 27 ஆயிரத்து 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 123ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் குணமான நிலையில், 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர்  சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 461ஆகவும், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 893ஆகவும் அதிகரித்துள்ளது. 2ம் இடத்திலுள்ள தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்தையும், 3ம் இடத்திலுள்ள டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 9 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments