டிக்டாக்கிற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி..!

0 4068

டிக்டாக் போன்று வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி, சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  நாட்டில் அதிக பயனாளர்களைக் கொண்டிருந்த டிக்டாக் செயலி சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ரீல்ஸ் அம்சத்தின் மூலம், டிக்டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் விடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, 25 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் முன்னனி இசை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த சோதனையை முயற்சியை தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments