திருமணம் செய்வதாக ஆசை காட்டி உறவினர் ஏமாற்றியதாக 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை

0 3681

திருமணம் செய்வதாக ஆசை காட்டி கர்ப்பமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காததால், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 17 வயது விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்துள்ளது.

உறவினரான ராம்கி என்ற இளைஞர், அந்த சிறுமியை திருமணம் செய்ய மறுத்து விட்டதுடன் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மே மாதம் மகளிர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தாவிடமும் 15 நாட்களுக்கு முன் மனு அளித்தார். ஆனால் ராம்கி கைது செய்யப்படவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த சிறுமி விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ராம்கி முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments