காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

0 1022

காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு, மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே வரும் 11ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments