ஜீலம் நதி குறுக்கே அணை கட்டும் விவகாரம்.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

0 2965

ஜீலம் - நீலம் நதிகளுக்கு குறுக்கே அணைக்கட்டும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்புக் காஷ்மீர், முசாஃபராபாத்தில் பொதுமக்களால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. 

சில தினங்களுக்கு முன்பு  சீன ஒப்பந்த  நிறுவனமான சீனா த்ரீ கோர்ஜெஸ் கார்ப்பரேஷன் (China Three Gorges Corporation) மற்றும் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு  இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் 18,000 கோடி மதிப்பில் 1124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் முசாஃபராபாத் அருகே கோஹலா என்ற இடத்தில் ஜீலம் - நீலம் நதிகளுக்கு குறுக்கே பிரம்மாண்ட அணை நீர்மின் நிலையத்துடன் கட்டப்படவுள்ளது. 

image

இந்த நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் கேடு  உருவாகும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நேற்று முஷாஃபராபாத்தில் மிகப்பெரிய அளவில் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை சர்வதேச நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் #SaveRiversSaveAJK என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் , "சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த சட்டத்தின் அடிப்படையில் சீனா, பாகிஸ்தான் நதகஙள அணை கட்ட திட்டமிட்டிருக்கின்றன? இது ஐ.நா சபையின் விதிகளை மீறிய செயல். அணைக் கட்டுமான திட்டம்  கைவிடப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்று கூறி உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments