இருசக்கர வாகன ஓட்டியை தாக்கியதாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

0 1933

இருசக்கர வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லை என்று கூறி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மலையான்குளத்தைச் சேர்ந்த தங்கத்துரை என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி புளியங்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தன்னை மடக்கி ஆவணங்கள் இல்லை எனக் கூறி சங்கரன் கோவில் போலீசார் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சத்தியபிரபா, சார்பு ஆய்வாளர், பயிற்சி சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதாகவும் ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் மனுவில் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டுள்ளதால் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து புகார் தொடர்பாக வேறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும், வழக்கை டிஎஸ்பி விசாரிக்கவும் தென்காசி எஸ்பி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments