நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது...!

0 4575

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த நபர் நடிகர் விஜய்யின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.

புவனேஷை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, நடிகர் விஜய் தற்போது வசித்தும் வரும், நீலாங்கரை இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments