செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஆக உயர்வு

0 1811

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

அம்மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 291 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆயிரத்து98ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று உறுதியான 291 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அறிகுறிகள் இருந்து தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டவர்கள் ஆவர். நேற்றுவரை 96 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதித்தவர்களில் 3ஆயிரத்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2ஆயிரத்து984 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments