ஊரடங்கு இரண்டாம் கட்டத் தளர்வுகள்.. வழிகாட்டல்கள்..!

0 4729

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஜூலை 31ந் தேதி வரையிலான இரண்டாம் கட்டத் தளர்வுகள் மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கின் 5வது கட்டம் இன்று இரவுடன் முடிவுக்கு வருவதையடுத்து, இரண்டாம் கட்ட தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதி வரை அதற்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் சேவைகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விதத்தில் குறைந்த அளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவை விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் வெளிநாட்டு விமான சேவை தற்போதுள்ள முறைப்படி குறைந்த அளவில் இயக்கப்படும் என்றும் படிப்படியாக அது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் திறக்கப்பட அனுமதியளிக்கப்பட்ட போதும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் (5 நபர்களுக்கு மேல் கூடாமல் இருக்க வேண்டும்) என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கு ஜூலை 15ம் தேதி முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நீடிக்கும். கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்குத் தடையில்லை. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் தடையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இபாஸ் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments