சென்னை - மதுரையில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு

0 958

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரையிலும் வருகிற 5 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன் பிறகு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை, தற்போதுள்ள முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், ஜூலை 6 முதல் சென்னையில் சில தளர்வுகள் அமலுக்கு வரும். இதன்படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக் கப்படும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் ஜவுளி மற்றும் நகைக்கடை உள்ளிட்ட பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்

சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று மீன் கடைகள், கோழி மற்றும் இறைச்சி கடைகள், தனிநபர் இடைவெளியுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.

தேனீர் கடைகள், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஹோட்டல்கள், ரிசார்டுகள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், மது பார் நிலையம் , கடற்கரை, கூட்ட அரங்கு , உயிரியல் பூங்கா,அருங் காட்சியகங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், வீட்டிலும் வெளி இடங்களுக்கு செல்லும் போதும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி, சுத்தமாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக கவசம் அணிந்து, தனிநபர் இடை வெளியை ஒவ்வொருவரும் கடைபிடிக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments