ஏடிஎம்களில் பணம் எடுக்க நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு

0 8194

ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணமில்லை என்ற விதி நீட்டிக்கப்படாததால் நாளை முதல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு எந்த எடிஎம்களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்திருந்து.

இது குறித்து வேறு அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற பழைய நிலையே தொடர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய பக்கத்தில், பெரு நகரங்களில் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 8 முறை இலவசமாக ஏடிஎம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் பணம் செலுத்த நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments