அமெரிக்காவில் கடந்த மார்ச் 15 முதல் முதன்முறையாக கொரோனா உயிரிழப்பு 5 ஆக குறைவு

0 2730

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த மூன்றரை மாதங்களில் இல்லாத அளவு நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் கடந்த ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 800 பேர் உயிரிழந்ததுடன் 18 ஆயிரம் பேர் வரை நோய் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்து சனிக்கிழமையன்று 900 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைத்து, தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்ற தவறினால் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments