ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை கணக்கிட்டது எப்படி? விளக்கம் அளிக்க மின்சாரவாரியத்திற்கு உத்தரவு

0 11603

மின் கட்டணம் கணக்கிடும் முறை பற்றி எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய மின்னுற்பத்தி பகிர்மானக் கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மின்அளவீடு செய்ய முடியாததால், வீட்டுப் பயன்பாட்டுத் தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்துக் கணக்கிட்டு, முன்பு செலுத்திய தொகையைக் கழித்து விட்டு, மீதியைச் செலுத்த வேண்டும் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் இரு மாதங்கள், அடுத்த இரு மாதங்கள் எனத் தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மின் கட்டணம் கணக்கிடும் முறை குறித்து இரு தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments