காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை

0 1123

சந்தேசரா சகோதரர்கள் வங்கிகளில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா ஆகியோரால் நிறுவப்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடனாகப் பெற்ற 14 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியன வழக்குப் பதிந்துள்ள நிலையில் நிதின், சேட்டன் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறி நைஜீரியாவுக்குச் சென்றுவிட்டனர்.

இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலின் பெயரும் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. கொரோனா சூழலால் அமலாக்கத்துறை இயக்ககத்துக்கு வர முடியவில்லை என அகமது பட்டேல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அகமது பட்டேல் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு வங்கிக் கடன் வழங்கியதில் அகமது பட்டேலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments