கொரோனாவிலிருந்து குணமான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

0 1633

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 17ம் தேதி கொரோனா உறுதியானது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் உடல் நலம் தேறி வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் நெகட்டிவ் என வந்திருப்பதால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார் எனவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments