பெங்களூரில் முழு ஊரடங்கு இல்லை.. கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்..!

0 4894

பெங்களூரில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கூறப்படுவதைக் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோக் மறுத்துள்ளார்.

பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக விலகலையும் தூய்மையையும் கடைப்பிடிக்காவிட்டால் மற்றொரு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்திருந்தார். இதனால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படக் கூடும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதை வருவாய்த்துறை அமைச்சர் அசோக் மறுத்துள்ளார்.

பெங்களூரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணும், மற்றுமொரு ஊரடங்கு, பொருளாதாரப் புத்துயிர் ஊட்டுதலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments