எகிறும் கொரோனா பாதிப்பு.. உச்சம் தரும் அச்சம்..!

0 5235
உச்சம் தொட்ட கொரோனா : 4.78 லட்சம் பேர் பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வந்த போதிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், குணம் அடைவோர் விகிதம் 57 புள்ளி 43 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கொரோனா உயிர்ப்பலி 15 ஆயிரத்தை எட்டி உள்ளது.

தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. டெல்லியில், கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

குஜராத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தையும், உத்தர பிரதேசத்தில் 19 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளது. ராஜஸ்தானில் வைரஸ் தொற்று பாதிப்பு16 ஆயிரத்தை தாண்டி விட்டது.

மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

கேரளாவைப் பொறுத்தவரை, ஒரே நாளில் 123 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

ஒரு லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 57 புள்ளி 43 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments