வேடந்தாங்கல் வழக்கு... மத்திய அரசை எதிர்மனுதாரராகச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

0 998

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராகச் சேர்க்க அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனியார் மருந்துத் தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காகச் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவைத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், தனியார் மருந்து நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதார்களாகச் சேர்க்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், தனியார் மருந்து நிறுவனத்தையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments