இந்தியாவிற்கு வெளியே முதலாவது யோகா பல்கலைக்கழகம்

0 1214

ஆறாவது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்தியாவுக்கு வெளியேயான, உலகின் முதலாவது யோகா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் துவக்கப்பட்டது.

இதற்கு விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. நியூ யார்க் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி காட்சியில், வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன், வெளியுறவு விகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் பிபி சவுத்ரி ஆகியோர் இணைந்து இந்த பல்கலைக்கழகத்தை துவக்கி வைத்தனர்.

இந்திய பாரம்பரிய கலையான யோகா குறித்த நவீன ஆய்வுகள் மற்றும் அதன் அறிவியல் தன்மைகள் குறித்த பாடத் திட்டங்கள் இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments