மின் கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கும் ஜூலை 15-க்கு பிறகு அவகாசம் வழங்கப்படாது -மின்சார வாரியம்

0 1695

மின் கட்டணம் செலுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளதாகவும், கூடுதல அவகாசம் வழங்கப்படாது என்றும் உயர் நீதிமன்றத்தில் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15ஆம் தேதி என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகர்வோர், மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கமுடியாது என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு விரிவான வாதங்களுக்காக விசாரணை, ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments