கோவில்பட்டி கிளைச் சிறைக்கு விசாரணைக் கைதியாக வந்த தந்தை, மகன் உயிரிழப்பு

0 2765

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறைக்கு விசாரணைக் கைதிகளாக வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

சாத்தான் குளத்தில் மரக்கடை நடத்தி வரும் ஜெயராஜ் ஊரடங்கு விதிகளை மீறி வெகுநேரம் கடைதிறந்ததாக கேள்வி எழுப்பிய போலீசாரிடம் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரையும் கைது  செய்து கோவில்பட்டி கிளைச்சிறையில் போலீசார் அடைத்த நிலையில் நேற்று இரவு, பென்னிக்ஸ் மாரடைப்பால் சிறையின் பின்புறமுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே காய்ச்சல் எனக் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராஜும் இன்று காலை உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments