கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 55.49 சதவீதமாக அதிகரிப்பு

0 1081

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 55 புள்ளி 49 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 925 பேர் குணமாகி உள்ளதாகவும், இதையும் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 755 பேர் குணமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனாவிலிருந்து குணமாவோரின்  விகிதம் 55 புள்ளி 49 சதவீதமாக மேம்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் நாளுக்கு நாள் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 730 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments