கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை - இந்திய சந்தையில் அறிமுகம்..!

0 28733

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஃபேபிஃப்ளூ மாத்திரையைப் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்ததையடுத்து, சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஃபேவிபிராவிர் என்னும் மாத்திரையை ஃபேபிஃப்ளூ என்னும் பெயரில் மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மாத்திரைகளைத் தயாரிக்கவும் விற்கவும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் ஆகும். முதல் நாளில் 9 மாத்திரைகளும் அடுத்த 14 நாட்களில் ஒருநாளைக்கு 4 மாத்திரைகளும் உட்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 11 நகரங்களில் நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் இந்த மாத்திரையின் செயல்திறன் 80 முதல் 88 விழுக்காடு வரை உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜப்பான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்கெனவே இந்த மாத்திரையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த மாத்திரை இன்று சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments