வேகம் குறையாத கொரோனா.. உச்சம் தொட்ட பாதிப்பு ..!

0 7078

இந்தியாவில், உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, 4 லட்சத்தை நோக்கி அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, இதுவரை 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பும், உயிர்ப்பலியும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

தமிழகம், இந்த பட்டியலில் தொடர்ந்து, 2- வது இடம் வகிக்கிறது. டெல்லியில், கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.

உத்தரபிரதேசத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், ராஜஸ்தானில் சுமார் 14 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 700க்கு மேற்பட்டோரும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா. தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில், சுமார் 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்ட, கொரோனா உயிர்ப் பலி 12 ஆயிரத்து 615 ஆக உயர்ந்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments