சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை-இந்திய ராணுவம் விளக்கம்

0 2800

கால்வன் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதலின்போது இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

சீன ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுங்குளிராக இருந்ததால் காயமடைந்த வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சீனா உடனான மோதலுக்குப் பின் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments