தென்கொரியா அதிகாரிகளை சந்தித்து பேச பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தை வடகொரியா வெடிவைத்து தகர்த்த வீடியோ வெளியீடு

0 8150

தென்கொரியா அதிகாரிகளுடன் பேச்சு நடத்த பயன்படுத்தப்பட்ட அலுவலக கட்டிடத்தை (liaison office ) வடகொரியா தகர்த்த வீடியோவை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

தென்கொரியாவில் இருந்து வடகொரியாவை விமர்சித்து துண்டுபிரசுரங்கள் வீசப்படுவதை நிறுத்தவில்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது.

இதையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச, கேசாங்கில் (Kaesong) கட்டப்பட்ட 4 மாடி அலுவலகத்தை  வடகொரியா  தகர்த்துவிட்டதாக தென்கொரியா நேற்று தெரிவித்திருந்தது.

அதை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு தொலைக்காட்சியான கேசிஎன்ஏ (KCNA), வெடி வைத்து தகர்க்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments