தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வட தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு

0 1824

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு மாவட்டங்களிலும், வட தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்குக் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

வட தமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்ன கல்லாறு ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கேரளக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments