முழு ஊரடங்கு கால நிவாரணத் தொகையை வீடு தேடி சென்று வழங்க உத்தரவு

0 3748

சென்னை காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு கால நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை 22 ஆம் தேதி முதல் வீடு தேடி சென்று வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியும் அப்பகுதிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இதை செயல்படுத்தும் விதமாக, வரும் 22 ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, சம்மந்தப்பட்ட துறையினர் நிவாரணத் தொகை வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments