மின் கட்டணத்தைத் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் எனக் கோரிக்கை - மின்வாரியம் பதிலளிக்க உத்தரவு

0 29606

ஊரடங்கு காலத்தில் வீட்டு இணைப்புக்கான மின்சார அளவைக் கணக்கிடுவது குறித்த மின் வாரியத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் மின் அளவைக் கணக்கிடாததால், வீட்டுப் பயன்பாட்டு மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார அளவைக் கணக்கிடும் போது, ஏற்கெனவே செலுத்திய தொகையைக் கழித்து விட்டு, மீதத் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் மின் வாரியம் அறிவித்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நான்கு மாதங்களுக்கு மொத்தமாக மின் கட்டணம் கணக்கிடுவதால் 14 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குத் தனித்தனியாக பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது. அரசு சார்பில், மின் கட்டணம் கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மின் வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments