கொரோனா சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏ பழனியிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு

0 1434

கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ கே.பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 12ம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன், அவரது இரு மகன்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் அவர்களது தந்தையின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதே போல் நேற்றும், இன்றும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் இன்று காலை 10 மணியளவில் எம்.எல்.ஏ பழனியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசிய முதலமைச்சர், உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்திட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments