டிரம்பின் அதிபர் கனவு; அதுக்கு தேவை கொரோனா மருந்து! மிராக்கிள் நடக்க காத்திருக்கும் டிரம்ப்

0 9294


அமெரிக்காவில் கொரேனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு, 20 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.உலகில் சமானிய மக்கள் முதல் பெரும் தலைவர்களின் கனவுகளை கொரோனா சிதைத்து வருகிறது. அதில், கொரோனாவால் தேர்தலில் தோல்வியை தழுவும் முதல் அரசியல் தலைவராக டொனால்ட் டிரம்ப் இருப்பார்  என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போது அதிபராக இருப்பவர் டொனால் டிரம்ப். இவர், அதிரடி செயலுக்கும் பேச்சுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். எனினும், அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவில் முன்னுரிமை என்ற கோஷத்தை முன் வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டார். டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்ததும் சற்று வித்தியாசமானதுதான். அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் உள்ளன. ஒன்று ஜனநாயக கட்சி , மற்றோன்று குடியரசுக் கட்சி. அதிபர் பதவிக்கும் இருவர்தான் நிற்பார்கள். அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய இரு கட்சிக்குள்ளும் உள் கட்சித்தேர்தல் நடைபெறும்.

கடந்த 2016- ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் கிலாரி கிண்டனும் போட்டியிட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தல் சற்று வித்தியாசமானது. மக்களிடத்தில் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் மட்டும் அதிபராகி விட முடியாது. அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக மக்கள் வாக்குகளை பெறுகிறாரோ அந்த மாகாணத்துக்கு அதிக எலக்டர்கள் கிடைப்பார்கள். இந்த எலக்டர்கள்தான் அமெரிக்க அதிபரையும் தேர்வு செய்வார்கள். உதாரணமாக கலிபோர்னியாவில் 55 எலக்டர்கள் உண்டு. இந்த மாகாணத்தில் டிரம்ப் அதிக வாக்குகள் பெற்றால், இந்த 55 எலக்டர்கள் வாக்கும் பிரநிதித்துவ சபையில் டிரம்புக்குதான் கிடைக்கும். பிரநிதித்துவ சபையில் 538 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 270 வாக்குகளை பெற்றால்தான் அமெரிக்க அதிபராக முடியும். கடந்த தேர்தலில் ஹிலரி கிளிண்டன் மக்களிடத்தில் 45.7 சதவிகிதமும் டிரம்ப் 45.5 சதவிகிதமும் அதிக வாக்குகளை பெற்றிருந்தனர். பிரநிதித்துவ சபையில் டிரம்ப் 290 எலெக்டர்களையும் ஹிலாரி 228 எலெக்டர்களையும் கைப்பற்றினர். இதனால்தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார்.

டிரம்புக்கு முன்னரே கிலாரி கிளிண்டன் அமெரிக்க மக்களிடத்தில் ரொம்ப பாப்புலரானவர். மக்களிடத்தில் நெருக்கம் கொண்டவர். எனவே, கிலாரி எளிதாக வென்று விடுவார் என்று கருதப்பட்டது.  ஆனால், ' அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற டிரம்பின் புதிய பாணியிலான அரசியல் அவருக்குகைகொடுத்தது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்த நவம்பர் மாதத்தில் நடக்கிறது. டொனால்ட் டிரம்புக்கு கிளிண்டன் , ஒபாமா மாதிரி இரண்டாவது முறையும் அமெரிக்க அதிபராக வேண்டுமென்பது கனவு. இதனால், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அவரே அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களத்தில் குதித்துள்ளார்.

கொரோனா பரவுவதற்கு முன் , டொனால்ட் டிரம்பே மீண்டும் அதிபராவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால், டிரம்பின் கனவை கொரேனா சிதைத்து போட்டு விட்டது. அமெரிக்காவில் டிரம்புக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை 39 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக ஒரு கணிப்பு சொல்கிறது. அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஜோ பைடனுக்கு ஆதரவு பெருகியுள்ளது. சி.என். எண் கணிப்புப்படி தேசிய அளவில் ஜோ பிடனை விட 14 புள்ளிகள் டிரம்ப் பின்தங்கியிருக்கிறார். வால்ஸ்ட்டீட் ஜர்னல் மற்றும் என்.பி.சி. கணிப்பில் 80 சதவிகி அமெரிக்கர்கள் நிலைமை கைமீறி போய் விட்டதாக கருதுவதாகவும் மக்களை பிரித்தாள நினைக்கும் டிரம்ப் செல்வாக்கை இழந்து விட்டதாக அமெரிக்கா முழுவதுமே நம்பப்படுவதாக தெரிவித்துள்ளது. 

ஒருவேளை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, நவம்பர் மாதத்துக்கு முன்னதாக அமெரிக்கர்களை இடர்பாட்டிலிருந்து காப்பாற்றினால் டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த மிராக்கிள் நடக்கவே டிரம்ப் காத்திருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments