இந்தியாவில் ரெம்டிசிவிர் தயாரிக்க உடன்பாடு..!

0 2587

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டிசிவிர் மருந்தைத் தயாரித்து விற்பதற்காக அமெரிக்காவின் கைலீட் நிறுவனத்துடன் இந்தியாவின் சைடஸ் கடிலா உடன்பாடு செய்துள்ளது.

அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தைக் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதித்ததில் அவர்கள் விரைவில் குணமடைவது தெரிய வந்துள்ளது. இதன் பாதுகாப்பு, செயல் திறன் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக மூன்றாம் கட்டச் சோதனை நடைபெற்று வருகிறது.

ரெம்டிசிவிர் மருந்தைத் தீவிர அறிகுறியுள்ள கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம் எனக் கூறி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஏற்கெனவே அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் சைடஸ் கடிலா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் உடன்பாட்டில் கைலீட் சயின்சஸ் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments