அசாமில் 2 வாரங்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் எரிவாயுக் கிணறு

0 866

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களாகக் கொழுந்துவிட்டெரியும் எரிவாயுக் கிணற்றை மூடுவதற்காகத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் என்னுமிடத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயுக் கிணற்றில் மே 27ஆம் தேதி தீப்பிடித்தது. இதனால் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான வேறிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தி எரிவாயுக் கிணற்றை அடைப்பதற்காகச் சிங்கப்பூரில் இருந்து வல்லுநர்கள் 3 பேர் வந்துள்ளதாகவும், எரிவாயுக் கிணற்றைப் பாதுகாப்பாக மூடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 4 வாரங்கள் ஆகும் என்றும், முன்கூட்டியே முடிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments