மாநிலங்களவையில் பா.ஜ.க. எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது

0 2260

வரும் 19ந் தேதி நடைபெற உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், பாஜக 9 இடங்களை கைப்பற்றி பெருமபான்மைக்கான தனது பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

242 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தற்போது 91 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மேலும் 9 இடங்களை கைப்பற்றினால் அதன் பலம் 100 ஆக அதிகரிக்கும்.

தொடர்ந்து தோழமை கட்சிகளான அதிமுக, பிஜேடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் (TRS)ஆகிய கட்சிகளின் ஆதரவும் நீடிக்கும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எளிதாக அரிதிப் பெரும்பான்மையை பெறக்கூடும். இதன்மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த சிக்கலும் இன்றி, எந்தவொரு சட்ட மசோதாவையும் நிறைவேற்றும் பலத்தை பாஜக அடைய வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments