பணிக்கு செல்வோருக்காக இன்று முதல் கூடுதலாக 250 பேருந்துகள்-மும்பை அரசு

0 472

மும்பையில் இன்று முதல் 250 BEST மாநகரப் பேருந்துகள் கூடுதலாக  இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே 1800 பேருந்துகள் இயக்க கடந்த 5ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்ட போதும், பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் , தனியார் அலுவலக ஊழியர்கள் போன்றவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மின்சார ரயில்கள் இயக்கப்படாத நிலையில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 250 பேருந்துகள் இயக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பேருந்துகளில் இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும், அதிகபட்சம் 5 பேர் மட்டும் நின்று பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments