கொரோனா பரவலைத் தடுக்க 3 மடிப்பு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் என WHO பரிந்துரை

0 3044

உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மூன்று மடிப்புக் கொண்ட முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் பொதுமக்கள் மூன்று மடிப்புக் கொண்ட முகக்கவசம் அல்லது, மருத்துவப் பயன்பாடு அல்லாத முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாத இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோரும், உடல்நலப் பாதிப்பு உள்ளோரும் மருத்துவப் பயன்பாட்டு முகக்கவசம் அணியலாம் என்றும், மற்ற அனைவரும் மூன்று மடிப்புக் கொண்ட முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

உண்மையிலேயே முகக்கவசம் தேவைப்படுபவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மருத்துவப் பணியாளர்கள், கொரோனா நோயாளிகள், இருமல், தும்மல் இருப்பவர்கள் மட்டும் அணியலாம் என ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments