இந்தியா, சீனா பரிசோதனைகளை அதிகரித்தால் அமெரிக்காவைவிட பாதிப்பும் அதிகரிக்கும்-டிரம்ப்

0 1435

இந்தியாவும், சீனாவும் மேலும் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால், அவ்விரு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விட அதிகம் இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா இதுவரை 2 கோடி கொரோனா பரிசோதனைகளை செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதோடு ஒப்பிட்டால், ஜெர்மனி 40 லட்சம் சோதனைகளையும், பெரிதாகப் பேசப்பட்ட தென்கொரியா 30 லட்சம் சோதனைகளையும் செய்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகமாகும் என்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா இதுவரை சுமார் 40 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments