விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்

0 1695

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள விஜய்மல்லையாவை, நாடு கடத்தும் உத்தரவை லண்டன் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்ததுடன், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து விட்டது.

எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் சில சட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று பிரிட்டன் தூதரக செய்திதொடர்பானர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எந்த விதமான நடைமுறைகள், எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

பிரிட்டன் சட்டப்படி ஒருவர் அகதியாக அடைக்கலம் கோரினால், அது தொடர்பாக முடிவு எடுக்கும் வரை அந்த நபரை நாடு கடத்த முடியாது. ஆனால் விஜய் மல்லையா அகதியாக அடைக்கலம் கோரினாரா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments