கருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம்- மு.க.ஸ்டாலின்

0 1222

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவாக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 3-ம் தேதி அன்று திமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதியிலேயே கருணாநிதியின் திருவுருவ படத்திற்கோ அல்லது சிலைக்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் திமுகவினர் அணிதிரளவோ, ஆடம்பர நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவோ கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, நலத்திட்ட உதவிகளை மட்டும் மேற்கொள்ளவும், சமூக ஒழுங்கை கடைப்பிடித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளன்று மரியாதை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments