நாட்டின் பெயரை மாற்றக்கோரிய மனு-உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

0 1233

நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனு தொடுத்துள்ளார்.அதில் அவர், நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும், இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவது போல உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கையாளும் அரசியலமைப்பு சட்ட 1ஆவது பிரிவில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments