நிலைமை இயல்பாகும் வரை மீன்பிடிக்க போவதில்லை - காசிமேடு மீனவர்கள்

0 627

விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மீன்பிடிக்க செல்ல போவதில்லை என சென்னை காசிமேடு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலத்தை மத்திய, மாநில அரசுகள் 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்ட நிலையில், இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்படிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிமேடு மீன்படி துறைமுகத்தில் 2500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்படிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 150 முதல் 170 டன்கள் வரை பிடித்து வரப்படும் மீன்களில், 60 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

ஊரடங்கால் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மீன் பிடிக்க சென்றாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாது என்பதால் நிலைமை சரியாகும் வரை மீன்படிக்க செல்வதில்லை என மீனவ சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments