பாக். தூதரக அதிகாரிகள் இருவர் உளவு பார்த்ததாக கையும் களவுமாக கைது

0 672

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுபார்த்ததாக கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அபித் ஹூசேன், முகமது தாஹிர் ஆகிய அந்த இரண்டு அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை தகவல்களை ஐ.எஸ்.ஐக்கு அனுப்பி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலி ஆதார் கார்டுகளுடன் இந்தியர்கள் எனக் கூறி பணியாற்றி வந்த இரு பாகிஸ்தானியர்களும் விசாரணையில் தாங்கள் உளவாளிகள் என்பதை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் யாரும் உளவு வேலைகளில் ஈடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments